AFC Asian CupBreaking NewsQatar Newsபிரதான செய்தி

AFC U-23 ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி காலிறுதி சுற்றை எட்டியுள்ளது

ஜே. எம். பாஸித் – கத்தார்

23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான AFC U-23 ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி காலிறுதி சுற்றை எட்டியுள்ளது. வரும் வெள்ளி காலிறுதி போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பலப்பரீட்சை செய்யும் அணிகளின் விவரம் குறித்து பார்ப்போம்.

கடந்த ஏப்ரல் மாதம் 15ம் திகதி AFC U-23 ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கின. வரும் மே மாதம் 3ம் திகதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. குரூப் சுற்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.

கத்தார், கொரியா, ஜப்பான், சவுதி அரேபியா, வியட்நாம், உஸ்பெகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் ஈராக் என எட்டு அணிகள் காலிறுதிக்கு முன்னேறி உள்ளன.

இதில் எந்தெந்த அணிகள் காலிறுதியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை மேற்கொள்கிறது..

  1. கத்தார் vs ஜப்பான்

2.கொரியா vs இந்தோனேசியா

3.சவுதி அரேபியா vs உஸ்பெகிஸ்தான்

4.ஈராக் vs வியட்நாம்

இதில் வெற்றி பெறும் அணிகள் 29ஆம் திகதி நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் விளையாடும்.

அரையிறுதியில் தோல்வியை தழுவும் அணிகள் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் மே மாதம் 2ஆம் திகதி விளையாடும். தொடரின் இறுதிப் போட்டி மே மாதம் 3ஆம் திகதி நடைபெறும்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button