சினிமாசெய்திபிரதான செய்தி

டைட்டானிக் மரத்துண்டு 718,750 டொலருக்கு ஏலம்

டைட்டானிக் திரைப்படத்தில் கதாநாயகி ரோஸ், உயிர்பிழைப்பதற்குக் காரணமாக இருந்த மரத்துண்டு ஏலம் ஒன்றில் 718,750 டொலருக்கு விலைபோனது.

‘பிளேனட் ஹொலிவுட்’ என்ற உணவக, உல்லாச விடுதி நிறுவனத்திற்குச் சொந்தமான பொருட்களும் ஆடைகளும் ஏலமிடப்பட்டபோது இந்த மரத்துண்டும் விற்பனை செய்யப்பட்டது.

கதவுச் சட்டத்தின் ஒரு பகுதியான அந்த மரத்துண்டில், காதலிக்கு மட்டுமே இடமுண்டு என்று விடாப்பிடியாகக் கூறும் கதாநாயகன் பின்னர் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய காட்சி பெரும் சர்ச்சைக்கு உள்ளான காலமும் இருந்தது.

ரோஸ் ஒரு சுயநலவாதி என்றும் கதாநாயகன் ஜேக் ஒரு முட்டாள் என்றும் கூறி ‘டைட்டானிக்’ திரைப்பட இயக்குநருக்குப் பலரும் மின்னஞ்சல்கள் அனுப்பினர்.இதற்கிடையே, கதவு என்று பலரும் தவறாக நினைத்திருந்த அந்த மரத்துண்டு, 1912ஆம் ஆண்டில் நடந்த உண்மையான ‘டைட்டானிக்’ அசம்பாவிதத்தைச் சேர்ந்த குப்பையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்று ‘ஹெரிடேஜ் ஒக்ஷன்ஸ்’ குறிப்பிட்டது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button