தாயை தடியால் தாக்கி கொலை செய்த மகன் கைது.

தன் தாயை தடியால் தலையில் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் 28 வயது மகன் நேற்று (30) மாலை பங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பங்கம, மேல் மலிதுவ, பாவுலவத்தையில் வசிக்கும் 59 வயதுடைய சந்திரலதா என்பவலே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபரான அவரது மகன் கடந்த காலங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு அங்கொடை மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் பின்னர் வீட்டை விட்டு ஓடிய சந்தேக நபர் அப்பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த போது பங்கம பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் கௌசல்ய நாணயக்கார சந்தேக நபரை கைது செய்ததுடன் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் விசாரணைகளை மேற்கொண்டார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் கிராம மக்களால் அக்குரஸ்ஸ மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button