“ஸ்ரீலங்கன் டொப் 100 விருது” பெற்றார் அஹ்மத் ஸாதிக்.

இளைஞர் பாராளுமன்ற வெளிய விவகார பிரதி அமைச்சர் அஹ்மத் ஸாதிக், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற அஹச நிறுவனத்தின் 2023 ஆண்டுக்கான ஸ்ரீலங்கன் டொப் 100 விருது “Sri Lankan Top 100 Awards” வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

பல்வேறு துறைசார்ந்த சாதனையாளர்களைக் கௌரவிக்கும் விதமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் Rear Admiral சரத் வீரசேகர, இலக்கிய புரவலர் காஸிம் உமர் மேலும் இன்னும் பல கௌரவ விருந்தினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். இந்த விருது தொடர்பாக அஹ்மத் சாதிக் குறிப்பிடுகையில்; இந்த அங்கீகாரம் என்னையும், சமூகத்தையும் மேம்படுத்த மேலும் கடினமாக உழைக்க ஊக்குவிக்கிறது. என்று குறிப்பிட்டார்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button