நாட்டில் அதிகரிக்கும் மரணங்கள்; கொவிட் தடுப்பூசியா காரணம் – வைத்தியர்கள் வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் மாரடைப்பால் இறப்பவர்களில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் தான் என்ற வதந்திகளில் உண்மையில்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மருத்துவ சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணரான ஆனந்த விஜேவிக்ரம, ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கு பல்வேறு சிக்கல்களின் சாத்தியம் மிகக் குறைவு என தெரிவித்துள்ளார்.

அந்த தடுப்பூசிகளை பெறாதவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவது மிகவும் குறைவு. தடுப்பூசி பெறாமல் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கே இவ்வாறான பாதிப்புகள் அதிகமாக உள்ளது.

தடுப்பூசியால் நன்மையே தவிர எவ்வித தீமையும் இல்லை. இந்நாட்டில் தடுப்பூசிகளுக்கு எதிரான ஒரு குழுவினர் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை செய்து வருகின்றனர்.

அவர்கள் கொரோனா தடுப்பூசி மாத்திரமின்றி அனைத்து தடுப்பூசிகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button