இன்றைய வானிலை அதிகரித்த வெப்ப நிலையாக காணப்படும்

அதிகரித்த வெப்பநிலை
2023.08.22

வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

இவை மனித உடலில் வெப்ப அதிகரிப்பை ஏற்படுத்துகின்றது. இதை “வெப்பச் சுட்டெண்” என அழைக்கப்படும். இதனை அதிகரித்த வெப்பநிலையாக கொள்ள முடியாது. இந்த வெப்பச் சுட்டெண்ணானது சரீரப்பதனுக்கும் அதிகரித்த வெப்பநிலைக்கும் இடையிலான தொடர்பின் கணிப்பீடாகும். இதன்போது நீர் இழப்பு ஏற்படுகின்றது. அதிகரித்த நீர்இழப்பின்போது மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இவற்றை தவிர்த்துக்கொள்ளும் முகமாக
1* அதிகளவில் நீர் ஆகாரங்கள், நீர்ப்பானங்கள் பருகவேண்டும்.
2* வெளி இடங்களில் வேலை செய்பவர்கள் களைப்படையாமல் இருக்க அடிக்கடி நிழல் சார்ந்த இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும்.
3* வீட்டில் உள்ள நோயாளிகளை அடிக்கடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
4* சிறுவர்கள் வெளியில் சென்று விளையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
5* வெளி இடங்களில் காணப்படும் செயற்பாடுகளை இயன்றளவு குறைத்துக்கொள்ள வேண்டும்.
6* மெல்லிய வெண்மை நிறமுடைய ஆடைகளை அணிய வேண்டும்.

மொஹமட் சாலிஹீன்
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button