முந்திச் செல்ல முற்பட்ட போது கோர விபத்து.

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை நகரில் மோட்டார் வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (20) மாலை 6 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன், அதிவேகமாக பயணித்த மோட்டார் வாகனம், பௌசர் ஒன்றினை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் வாகனத்திற்கும்  பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் , மோட்டார் வாகனத்தின் சாரதி திம்புல பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் திம்புளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த சில வாரங்களாக பல வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், வாகனங்களின் அதிவேகமும், கவனக்குறைவுமே விபத்துக்களுக்கான காரணம் என திம்புல பத்தனை பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புல பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button