சிங்கப்பூர் பயணமாகிறார் ஜனாதிபதி ரணில்; கைச்சாத்திடப்படவுள்ள முக்கிய ஒப்பந்தம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை (21) சிங்கப்பூர் செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த விஜயத்தின் போது சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியென் லூங் மற்றும் ஏனைய உயர்மட்ட பிரமுகர்களை சந்திக்க உள்ளார்.

இலங்கை மற்றும் சிங்கப்பூர் அரசாங்கங்களுக்கு இடையில் பரிஸ் உடன்படிக்கையின் கீழ் கார்பன் நடுநிலைமை தொடர்பான ஒப்பந்தமும் அவரது பயணத்தின் போது கையெழுத்திடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி நாட்டில் இல்லாதபோது, அவருக்கு கீழேயுள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட நான்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button