ஜனாதிபதி ரணில் திடீர் கண்காணிப்பு விஜயம்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினர் நேற்று (19) யால தேசிய பூங்காவிற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

அதாவது யால தேசிய பூங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகள் விரைவாக பிரவேசிப்பதற்கான பயணச்சீட்டுகளை வீதியூடாக பெற்றுக்கொள்ளும் முறை தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும், நிலவும் வறண்ட காலநிலை காரணமாக பூங்காவில் உள்ள வறண்டு கிடக்கும் கிணறுகளுக்கு நீரை வெளியிடும் நடவடிக்கையில் பூங்கா நிர்வாகத்துடன் ஜனாதிபதி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இணைந்து கொண்டதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்கும் இணைந்துகொண்டார் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

…………………………………………………

📍Notice

 SKY TAMIL NEWS WHATSAPP CHANNEL யில் இணையுங்கள்.

நீங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணைவதால் ஒருவரின் வட்ஸ்அப் இலக்கம் மற்றவர்களும் காண்பிக்காது, இதனால் தேவையற்ற பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டி ஏற்படாது.

இன்றே இணையுங்கள்⬇️

https://whatsapp.com/channel/0029Va9VBPw2phHMWeXcSM21

…………………………………………………

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button