இம்முறை புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் மாற்றமா? பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

இந்த வருடம் நடைபெறவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை முன்னையதைப் போன்று நடைபெறும் எனவும், இந்த வருடமும் வினாத்தாள் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படாது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம் கொண்டு வரப்படும் என கருத்துக்கள் எழுந்தாலும், எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களில் அது மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு, 2023 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்தப் பரீட்சையில் சித்திபெறும் மாணவர்களுக்கு பாடசாலைகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்தல் மற்றும் உதவித்தொகை வழங்குதல் என்பன ஒரு வரப்பிரசாதமாகும்.

வருடாந்தம் சுமார் 300,000 பரீட்சார்த்திகள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button