தடுப்பூசியால் பதிவான மற்றுமொரு மரணம் – அதிர்ச்சியில் பெற்றோர்!

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தடுப்பூசி வழங்கப்பட்டதன் காரணமாக சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுவனே இந்த துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

தடுப்பூசிகள் வழங்கப்பட்டதன் பின்னர் சிறுவனின் உடல்நிலையில் பல பிரச்சினைகளை ஏற்பட்டதாக சிறுவனின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தடுப்பூசி வழங்கப்பட்டதன் காரணமாக சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுவனே இந்த துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

தடுப்பூசிகள் வழங்கப்பட்டதன் பின்னர் சிறுவனின் உடல்நிலையில் பல பிரச்சினைகளை ஏற்பட்டதாக சிறுவனின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

முழங்காலில் ஏற்பட்ட காயம் மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் 6 நாட்களாக பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும் குணமடையவில்லை. அவரது நோயைக் கண்டறிய முடியவில்லை என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.

ஆனால், சிறுவனின் உடல்நிலை மோசமடைந்து, மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகக் கூறி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்கள் அவரை ஒரு இயந்திரத்துடன் இணைக்க முயன்றுள்ளனர், ஆனால் சுயநினைவு திரும்பாத தெனுஜ, துரதிர்ஷ்டவசமாக தீவிர சிகிச்சை பிரிவில் இறந்துள்ளார்.

இதன் பின்னர் சிறுவனின் நுரையீரல் சுருங்கிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல்நிலை மோசமடைந்த சிறுவனுக்கு 3 தடுப்பூசிகளை மருத்துவர்கள் செலுத்தியதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பில், கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரியவிடம் கேட்ட போது, ​​குறித்த சிறுவன் காச நோயினால் உயிரிழந்துள்ளதாகவும், வழங்கப்பட்ட தடுப்பூசி காரணம் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இங்கிரிய பிரதேசத்தில் தனியார் மருந்து கடையொன்றினால் வழங்கப்பட்ட மருந்தை உட்கொண்ட நபர் ஒருவர் உயிரிழந்த சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) உயிரிழந்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இங்கிரிய, உருகல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய டபிள்யூ.லீலாரத்ன என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலஸ்ட்ராலுக்கு வைத்தியர் பரிந்துரைத்ததன் பிரகாரம் மருந்தகத்தினால் அவருக்கு மருந்து வழங்கப்பட்டதாகவும், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மருந்தை உட்கொண்டுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

இது தவறான மருந்தினால் ஏற்பட்ட மரணமா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button