இலங்கைக்கு விரைவில் கிடைக்கவுள்ள பெருந்தொகை டொலர்கள் – அமைச்சர் வெளியிட்ட தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையின் கீழ் 333 மில்லியன்  அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நிதி ஒழுக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மோசடிக்கு எதிரான ஆயத்தம் ஆகிய விடயங்களைக் கருத்தில் கொண்டே, சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை இலங்கைக்கு வழங்கப்படும்.

இரண்டாவது தவணையின் கீழ் 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.

இந்த இரண்டாவது தவணையை பெறுவது இலங்கையின் எதிர்கால பொருளாதாரம் குறித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு நம்பிக்கையான செய்தியை வழங்கும். அத்துடன், நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் பிரவேசித்துள்ளது என குறிப்பிட்டார். 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button