நீர் தட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விடுத்த எச்சரிக்கை

தற்போதைய காலநிலை மாற்றத்தினால் நாட்டில் இன்னும் 20 வருடங்களில் பாரிய நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தற்போதைய சூழ்நிலையில் இந்த தருணத்தில் இருந்தே அதற்கு தயாராக இருக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நுகேகொட அனுலா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். உலகில் ஏற்படும் காலநிலை மாற்றத்தை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். ஐரோப்பா தீப்பற்றியெறியும் அளவிற்கு வெப்பநிலை அதிகரித்துள்ளது. அதனால் தான், ஐக்கிய நாடுகள் சபை காலநிலை மாற்ற நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தும் காலத்தை 10 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளி அதனை துரிதப்படுத்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.அதன்படி, 2050 ஆம் ஆண்டாகும் போது நிறைவு செய்ய வேண்டியிருந்த காலநிலை நிகழ்ச்சி நிரலை 2040ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய அனைத்து நாடுகளும் தயாராகி வருகின்றன.

மற்றைய விடயம், உலகப் பொருளாதாரம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த பல்வேறு துறைகளைச் சார்ந்துள்ளது.செயற்கை நுண்ணறிவு, ரோபா தொழிநுட்பம், வலு சக்தி சேமிப்பு, பிளொக் செயின் தொழில்நுட்பம், ஜெனொம் விஞ்ஞானம் ஆகிய சில துறைகள் மாத்திரம் உலகப் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்துகின்றது. அதற்கு நாமும் தயாராக வேண்டும்.

இந்த தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் உலகப் பொருளாதாரத்தில் 300 முதல் 700 டிரில்லியன் டொலர் வரையிலான பாரிய பெறுமதி இணையும் என்று பொருளாதார வல்லுநர்கள் மதிப்பீடு கின்றனர். இந்த பொருளாதாரத்துடன் தான் உலகம் முன்னேறி வருகிறது. அதற்கு நாமும் தயாராக வேண்டும்.

1970 மற்றும் 80 ஆம் ஆண்டுகளில் ஆடைத் தொழிலுக்கு நாம் தயாராக இருந்ததைப் போலவே, இப்போது அந்தத் தொழில்நுட்பங்களை ஏற்க நாம் தயாராக இருக்க வேண்டும். அதற்குத் தயாராவதற்கு முதலில் இந்த நாட்டின் கல்வி முறையை மாற்ற வேண்டும். இந்தப் பாடங்களுக்கு உகந்த வகையிலான பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட வேண்டும். மேலும், ஆங்கில மொழி, சீன மொழி , ஹிந்தி மொழி ஆகிய மொழி அறிவுகளையும் பெற்றிருக்க வேண்டும். அப்படியானால், இந்த விடயத்தில் அறிவைப் பெறக்கூடிய பாடசாலைகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அதன்படி, அரச பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை நிறுவ நாம் திட்டமிட்டுள்ளோம். பணம் காரணமாக கல்வியை நிறுத்தாமல், மாணவர்களுக்கு அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் இணைவதற்கு, வெளிநாடுகளைப் போல் மானிய முறையில் கடன் வழங்கும் திட்டத்தை நாம் செயற்படுத்துவோம்.

இன்று நீங்கள் Gen Z தலைமுறையின் குழந்தைகள். அடுத்து, Gen Afla குழுவுக்கு தயாராக வேண்டும். அங்கு கையடக்கத் தொலைபேசி மூலம் கல்வியைப் பெறலாம். இவ்வாறு, கல்வி முறை முற்றிலும் மாறுபடுகிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும்.

அரசியல்வாதிகள் கடந்த காலத்தைப் பற்றி மாத்திரமே சிந்திக்கிறார்கள். மாணவர்களாகிய நீங்கள் நிகழ்காலத்தைப் பற்றி சிந்திக்கிறீர்கள். ஆனால் நாம் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறோம். எனவே இதை சரி செய்து கொண்டு முன்னேற வேண்டும். கடந்த காலத்தைப் பற்றி சிந்திப்பவர்களை எப்படியாவது நிகழ்காலத்திற்கு கொண்டு வர வேண்டும். நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்போது எதிர்காலத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

இந்தக் கல்வி முறையை மாற்றாவிட்டால் நமக்கு எதிர்காலம் இல்லை. புதிய கல்வி முறையின் மூலமே நாம் முன்னேற முடியும்.தொழிற்சாலைகள், கட்டிடங்கள் மற்றும் வீதிகள் அமைக்க முடியும், என்றாலும் கல்வி அறிவு இல்லாமல் எதிர்காலம் இல்லை.எனவே, புதிய கல்வி முறையை உருவாக்கி நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க அரசாங்கம் என்ற வகையில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

…………………………………………………

📍Notice

 SKY TAMIL NEWS WHATSAPP CHANNEL யில் இணையுங்கள்.

நீங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணைவதால் ஒருவரின் வட்ஸ்அப் இலக்கம் மற்றவர்களும் காண்பிக்காது, இதனால் தேவையற்ற பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டி ஏற்படாது.

இன்றே இணையுங்கள்⬇️

https://whatsapp.com/channel/0029Va9VBPw2phHMWeXcSM21

…………………………………………………

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button