பராமரிப்பு வேலைகள் – 18 மணித்தியால நீர் விநியோகத் தடை.

எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 18 மணிநேர நீர் விநியோகத் தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

மு.ப. 8.00 மணி முதல் மறுநாள் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணி வரையிலான காலப்பகுதியில் கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்சை, கோட்டை, கடுவல நகரசபை பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ பிரதேச சபை பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபை பகுதிகள், இரத்மலானை மற்றும் கட்டுப்பெத்த ஆகிய பிரதேசங்கள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும்.

சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு விநியோகிக்கப்படும் மின்சார விநியோகம் தடைப்படுதல் மற்றும் அத்தியவசிய உள்ளக விஸ்தரிப்பு பணிகள் காரணமாக இந்நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை வருத்தம் தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button