இலங்கையில் கோடிக்கணக்கில் விற்பனையான மாணிக்ககல்

இலங்கையில் ப்ளுபேயா ரக மாணிக்கக்கல் ஒன்று நேற்றைய தினம் (16) அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இரத்தினபுரியில் ப்ளுபேயா ரக மாணிக்கக்கல்லே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த மாணிக்கக்கல் 43 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் குறித்த மணிக்கக்கல் கஹவத்தை – கட்டங்கே பிரதேசத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணிக்கக்கல் 99 கரட் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெல்மடுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரினால் 43 கோடி ரூபாவுக்கு இந்த மாணிக்கக்கல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button