குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 54 இலங்கையர்கள்

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் 54 பேர் இலங்கை வந்தடைந்துள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான UL230 விமானம் மூலம் 53 பெண்களும் ஒரு ஆணும் நாட்டிற்கு வந்தடைந்துள்ளனர்.

செல்லுபடியாகும் வீசா காலத்தை தாண்டி குவைத்தில் தங்கியிருப்பது, பணியிடத்தை விட்டு ஓடி, வேறு இடங்களில் பணிபுரிவது போன்ற காரணங்களால் இவர்கள் நாட்டிற்கு வர முடியாமல் தவித்தவர்கள் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வருகை தந்தவர்களில் பெரும்பாலோர் அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன்  ஏனையவர்கள் பொலன்னறுவை, மொனராகலை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வருகை தந்தவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கிய கட்டணத்தை பெற்றுக்கொண்டு தமது ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். 

வெளிநாடுகளில் தொழிலுக்காக சென்று நாட்டிற்கு வரமுடியாமல் பாதுகாப்பான வீடுகளில் தங்கியுள்ள தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த பணியகத்தின் தலைவர், தூதரகங்களின் தொழிலாளர் நலன் பிரிவு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய, குவைத் தூதரகத்தில் பதிவு செய்து குடிவரவுத் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் உரிய தகவல்களை சமர்ப்பித்து ஒரு நாளில் இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

…………………………………………………

📍Notice

 SKY TAMIL NEWS WHATSAPP CHANNEL யில் இணையுங்கள்.

நீங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணைவதால் ஒருவரின் வட்ஸ்அப் இலக்கம் மற்றவர்களும் காண்பிக்காது, இதனால் தேவையற்ற பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டி ஏற்படாது.

இன்றே இணையுங்கள்⬇️

https://whatsapp.com/channel/0029Va9VBPw2phHMWeXcSM21

…………………………………………………

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button