கத்தார் ஹய்யா அட்டை வைத்திருவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான அறிவிப்பு

கத்தாரில் நடைபெற்ற FIFA உலகக் கோப்பையின் போது பார்வையாளர்கள் நுழைவதற்கு பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஹய்யா அட்டையினை இவ்வருடம் கத்தாரில் நடைபெறவிருக்கும் மிக பிரம்மண்டமான தோஹா எக்ஸ்போ-2023 க்கு மீண்டும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுள்ளது.

கத்தார் அரசாங்கமானது ஹய்யா அட்டையின் செல்லுபடி காலத்தை அடுத்த வருடம் அதாவது ஜனவரி 2024 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

தோஹா எக்ஸ்போ-2023 நிறைவு பெறும்வரை ஹய்யா அட்டையானது குறித்தவர்களின் பயன்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹய்யா அட்டையுடன் நுழைவு நடைமுறைகள் பற்றிய மேலதிக விபரங்கள் அனைத்தும் விரைவில் அறிவிக்கப்படும் என பொதுச் செயலாளர் முகமது அல் கௌரி அவர்கள் அறிவித்துள்ளார்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button