பிறந்தவுடனே தரையில் விழுந்த சிசு பரிதாபமாக உயிரிழப்பு

மருத்துவ ஊழியர்களின் தவறினாலும் கவனக் குறைவினாலும் பிரசவ நேரத்தில் குறித்த அறையின் தரையில் விழுந்த சிசு ஒன்று, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லஞ்சிய என்ற கிராமத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் தனது குழந்தைப் பிரசவத்திற்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதே இந்த துயர அனுபவத்தை சந்தித்துள்ளார்.

41 வயதான அவரது கணவர், குமாரசிங்க திஸாநாயக்க இது தொடர்பில் தெரிவிக்கையில்,

“எனது மனைவி கல்லஞ்சிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவள் அங்கு சிக்கல்களுக்கு ஆளானார். ஆம்புலன்சில் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.பின்னர், பிரசவத்திற்காக பிரசவ அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பிரசவ நேரத்தில், மருத்துவ ஊழியர்களால் குழந்தையைப் பிடிக்க முடியாமல் என் குழந்தை தரையில் விழுந்துவிட்டது“ என கண்ணீருடன் தெரிவித்தார்.

தற்போது குழந்தையின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குழந்தை சரியாக முதிர்ச்சியடையவில்லை என்று மருத்துவர்கள் கூறினாலும், அவர்கள் குழந்தை கீழே விழுந்ததைபற்றி பேசவில்லை என்று தெரிவித்தார்.

வைத்தியசாலை பணிப்பாளர் துலான் சமரவீர இது தொடர்பாக தெரிவித்துள்ளதாது,

“பிரசவ அறையில் வைக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு சாதாரண பிரசவம் சுமார் 20 நிமிடங்களுக்குள் இடம்பெறும்.முதலில் குழந்தையின் தலை வெளியில் வரும். அதன் பிறகு, தோள்பட்டை, கை பகுதி மற்றும் கால்கள் போன்ற பாகங்கள் வெளியே எடுக்கப்படுகின்றன. இது சிறிது நேரம் எடுக்கும் மிகவும் கடினமான செயல். ஆனால், சில சமயங்களில் குழந்தை ஒரே நேரத்தில் வெளியே வரும்.சில சமயம் எப்போது வரும் என்று சொல்ல முடியாது. நம்பிக்கை இல்லாத போது திடீரென வரும்போதும், ​​குழந்தையை வெளியில் பிடிக்க முயலும் போது சில சமயம் சிரமங்கள் ஏற்படலாம்.அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பங்களில் ஒன்று தான் தற்போது இடம்பெற்றுள்ளது. ஏனெனில், இந்த தாய் பிரசவத்திற்காக வேறு வைத்தியசாலைக்குச் சென்று அங்கிருந்து இங்கு மாற்றப்பட்டுள்ளார்.பின்னர் குறித்த நாளில் அனுமதிக்கப்படவிருந்த பேராசிரியர் பிரிவின் பிரசவ அறைக்கு அழைத்துச் செல்ல முடியாததால், அருகில் உள்ள பிரசவ அறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.குறித்த அறையில் சிறிது நேரம் கழித்து தொடங்கிய பிரசவத்தில் 31 வாரங்கள் ஆன குறித்த குழந்தை சரியாக வளர்ச்சியடையவில்லை எனவும் கண்டறியப்பட்டதாகவும் வைத்தியர் சுட்டிகாட்டினார்.கடும் அழுத்தத்தால் அதிக விசையுடன் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் தொப்புள் கொடி உடைந்ததால், அக்குழந்தையை பிடிக்க அந்த நேரத்தில் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.ஆனால், என்ன நடந்தது என்று என்னால் சரியாக சொல்ல முடியாது. இருப்பினும், இதை நான் எதிர்பாராத, துரதிர்ஷ்டவசமான சம்பவமாக பார்க்கிறேன்.ஆனால், அலட்சியமாக இதைப் பற்றி சொல்ல முடியாது. ஏனென்றால், இந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அனைவரும் இந்த பிரசவத்தை கவனித்துள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button