முட்டை விலை தொடர்பில் விசேட வலியுறுத்தல்

மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதித்தால், டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டையை 35 ரூபாவுக்கு வழங்க முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் கட்டுப்பாட்டு விலையை நீக்கும் நடவடிக்கையால் தற்போது முட்டை விற்பனை வலையமைப்பு வலுவடைந்து வருவதாக அதன் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிடுகின்றார்.

இதேவேளை ஒரு கிலோகிராம் உறைந்த கோழி இறைச்சியை 1,250 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் குணசேகர குறிப்பிடுகின்றார்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button