குவைத் மற்றும் லெபனானில் பார்பி திரைப்படத்திற்கு தடை

ஓரினச் சேர்க்கை முறையை ஊக்குவிப்பதாக கூறி குவைத் மற்றும் லெபனானில் தடை விதிப்புக்கு உள்ளாகி உள்ளது பார்பி திரைப்படம்.

கற்பனை கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து உலாவ விடுவதில் சளைக்காதவர்கள் ஹாலிவுட்காரர்கள்.

அந்த வகையில், குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான பார்பி பொம்மைகளுக்கு உயிர் கொடுத்து பார்பி படத்தை உலாவ விட்டார் பெண் இயக்குநர் கிரெட்டா கெர்விக்.ஃபேண்டஸி, காமெடியுடன் பெண்ணியம் பேசும் இந்த திரைப்படம், குழந்தைகளை தவிர்த்து பெரும்பாலான தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் அந்நியப்பட்டு இருந்தது.அந்த குறையையும் தீர்த்துள்ளது AI தொழில்நுட்பம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்டோரை பார்பி பாய்களாக உருமாற்றி உள்ள இந்த பேன்மேட் போஸ்டர்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

மற்றொரு புறம், பார்பி திரைப்படம் ஓரின சேர்க்கை முறை மற்றும் பாலின மாற்றங்களை ஊக்குவிப்பதாக கூறி குவைத்தில் தடை விதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், சமூக நெறிமுறைகளுக்கு எதிராக உள்ளதாகவும் கூறி, மீண்டும் சென்சர் செய்ய உத்தரவிட்டுள்ளது லெபனான் அரசு.

…………………………………………………

📍Notice

 SKY TAMIL NEWS WHATSAPP CHANNEL யில் இணையுங்கள்.

நீங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணைவதால் ஒருவரின் வட்ஸ்அப் இலக்கம் மற்றவர்களும் காண்பிக்காது, இதனால் தேவையற்ற பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டி ஏற்படாது.

இன்றே இணையுங்கள்⬇️

https://whatsapp.com/channel/0029Va9VBPw2phHMWeXcSM21

…………………………………………………

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button