இலங்கையில் பெய்த ஐஸ் மழை.

மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஊவா மாகாணமெங்கும் பலத்த மழை பெய்து வருகின்றது.

நேற்று (09) மாலை பெய்த மழையின் காரணமாக நீரோடைகள் பல சிறிய அளவில் நிரம்பி உள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

இது இவ்வாறிக்க மொணராகலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுமார் நான்கு ஐந்து வருடங்களுக்குப் பின்னர் ஐஸ் மழை (ஆலங்கட்டி மழை) பெய்துள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் ஐஸ் மழையினை சிறுவர்கள் மாத்திரமன்றி வயது வந்தவர்கள் என பலரும் பாத்திரங்களில் நிரப்பி பாவனைக்கு எடுத்துள்ளனர்.

ஐஸ் மழை கட்டிகளை உண்ணுவதால் வயிற்றில் உள்ள பல நோய்கள் தீருவதாக ஐதீகம் கூறியுள்ளதாகவும் முதியவர்கள் தெரிவித்தனர்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button