அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடைசெய்யப்படவுள்ள பொருட்கள் – சுற்றாடல் அமைச்சரின் அறிவிப்பு

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தும் சில பிளாஸ்டிக் பொருட்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடை செய்யப்படும் என சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, பிளாஸ்டிக் மாலைகள், ஒருமுறை பயன்படுத்தும் கரண்டிகள், முள்கரண்டிகள், தயிர் மற்றும் ஐஸ்கிரீம் கரண்டிகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்கள், பிளாஸ்டிக் இடியப்பத் தட்டுகள் ஆகியனவற்றுக்கு இந்த தடை விதிக்கப்படவுள்ளது.

இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் 28ஆவது கூட்டத்தில், பாதிக்கப்படக்கூடிய மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான காலநிலை நியாய மன்றத்தை இலங்கை ஆரம்பிக்கத் தயாராக உள்ளது என சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

காலநிலை நீதியை உறுதிப்படுத்துதல், இழப்புகள் மற்றும் சேதங்களுக்கு நிதியளிப்பதை துரிதப்படுத்துவதற்கு பாரம்பரியமற்ற மாற்று அணுகுமுறையை பேணும் பொதுவான நோக்கத்துடன், காலநிலை நியாய மன்றம் ஒன்றை நிறுவுவதற்கு இலங்கை முன்மொழிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச்சூழல் அதிகாரிகளின் ஐந்தாவது மன்றத்தை 2023 ஒக்டோபர் 3 முதல் 6 வரை கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் வேலைத்திட்டத்துடன் இணைந்து சுற்றாடல் அமைச்சு, இதனை ஏற்பாடு செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button