சமையல் எரிவாயு விலை திருத்தம் குறித்து லாஃப்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு!

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் எந்தவித விலை திருத்தத்தையும் மேற்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி நிரோசன் ஜி.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும் இலங்கையில் தற்போதைய நிலையில் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை எனவும் லாஃப்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இன்று முற்பகல் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button