ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் உயிரிழந்த குழந்தை தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு.

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மூன்று வயது குழந்தையின் சிறுநீரக சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் இன்று (02) கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் கிருமி தொற்று காரணமாக கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதும் 03 மாதங்கள் வயதுடைய ஆண் குழந்தை ஒன்று அண்மையில் (27) உயிரிழந்தது.

குழந்தைக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் நிலைமை இருப்பதாக வைத்தியர்கள் கண்டறிந்ததாகவும், வலது சிறுநீரகம் ஆரோக்கியமாக உள்ள நிலையில் இடது சிறுநீரகத்தை அகற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அறுவை சிகிச்சையின் போது ஆரோக்கியமான வலது சிறுநீரகமும் அகற்றப்பட்டதாக வைத்தியர்கள் பின்னர் அறிவித்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இரண்டு சிறுநீரகங்களும் இல்லாததால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வரை டயாலிசிஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட குழந்தை, கிருமி தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் வைத்தியர்களின் அலட்சியமே  குழந்தையின் மரணத்திற்கு காரணம் என பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்புடத்தக்கது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button