ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்த மயோன் முஸ்தபாவுக்கு அழைப்பு.!

கல்முனை தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தி, இளம் சந்ததிக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தும் செயற்றிட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்க முன்வருமாறு முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடு பூராகவும் கட்சி புணரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகிற அதேவேளை, கல்முனை தொகுதியிலும் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுக்க மயோனை அழைத்துள்தோடு எதிர்வரும் O6 ஆம் திகதி கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் பங்குபற்றுதலுடன் கல்முனையில் இடம்பெறவுள்ள கட்சியின் புனரமைப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் பாலித ரங்கே பண்டார நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேவளை நேரடி அரசியல் களத்தில் இணைந்து செயற்படுமாறு மயோன் முஸ்தபாவின் புதல்வர் றிஸ்லி முஸ்தபாவையும் இணையுமாறு பாலித ரங்கேபண்டார அழைப்புவிடுத்துள்ளார்.

இது பற்றி கட்சியின் கல்முனைத் தொகுதி செயற்பாட்டாளர்களுடன் சிறிகொத்தாவில் இடம்பெற்ற சந்திப்பிலும் பாலித ரங்கே பண்டார பிரஸ்தாபித்துள்ளார்.

இந்நிலையில் O6 ஆம் திகதி

கல்முனையில் இடம்பெறவுள்ள

கூட்டத்தில் மயோன் முஸ்தபா கலந்து கொள்வாரா என்ற பாரிய எதிர்பார்ப்பு கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த 1999 ஆண்டுகளில் தனியொரு மனிதனாக நாட்டின் தேசிய கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணிலுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்து இணைந்து அம்பாரை கரையோர பிரதேசமெங்கும் பாரிய பங்களிப்பை வழங்கி ஐக்கிய தேசிய கட்சிக்கு எழுச்சியை உருவாக்கியவர் மயோன் முஸ்தபா என்பது குறிப்பிடத்தக்கது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button