பாடசாலை மாணவர்களுக்கான கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு

தகவல் தொடர்பாடல் பயிற்சி மையம் ஏறாவூர் நகரசபையின் இணை அணுசரனையுடன் மட்/மட்/ ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு இன்று காலை 09 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் ஏறாவூர் நகரசபையின் செயலாளர் #MHM_ஹமீம் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் தகவல் தொடர்பாடல் பயிற்சி நிலையத்தின் தலைமை செயற்பாட்டு உத்தியோகத்தர் திருவாளர் பென் பெனிக்னஸ், மட்/மட்/ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி சுதாகரி மணிவண்ணன், ஆசிரியைகளான திருமதி குமரேஸ்வரன், ஏறாவூர் நகரசபை உத்தியோகத்தர் திருமதி அச்சளா சுகந்தினி, திண்மக்கழிவு மேற்பார்வையாளர் ஜனாப் அசனார், Cct உறுப்பினர்களான சில்வயன், அப்ரின் சியானி, திவ்யா, சுவர்னாஸ், ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

இந்நிகழ்வில் தலைமையுரையின் போது எமது ஏறாவூர் நகரசபை எல்லைக்குள் பல பாடசாலைகள் காணப்படுகின்றது. இப்பாடசாலைகளில் மட்/மம/றஹ்மானியா பாடசாலை சிறந்த முறையில் திண்மக்கழிவுகளை பேணி வந்ததன் காரணமாக கழிவுகளற்ற கனவான் பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிப்பு செய்யப்பட்டிருந்தது. அதே போல் இப்பாடசாலையும் சிறந்த முறையில் கழிவுகளை பேனிவருகின்றது. இப்பாடசாலைக்கும் இவ்விருதை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு காணப்படுவதாக ஏறாவூர் நகரசபையின் செயலாளர் தெரிவித்தார்.

இச்செயலமர்வில் சுமார் 120 பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்

…………………………………………………

📍Notice

 SKY TAMIL NEWS WHATSAPP CHANNEL யில் இணையுங்கள்.

நீங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணைவதால் ஒருவரின் வட்ஸ்அப் இலக்கம் மற்றவர்களும் காண்பிக்காது, இதனால் தேவையற்ற பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டி ஏற்படாது.

இன்றே இணையுங்கள்⬇️

https://whatsapp.com/channel/0029Va9VBPw2phHMWeXcSM21

…………………………………………………

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button