தேசிய வைத்தியசாலையின் செயற்பாடுகள் முடங்கும் அபாயம் – மின்சார சபையின் அவசர கடிதம்

தேசிய வைத்தியசாலையின் செயற்பாடுகள் முடங்கும் அபாயத்தை தவிர்க்கும் வகையில், நிலுவைத் தொகையை விரைவில் வழங்குமாறு இலங்கை மின்சார சபை, சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் ஸ்தாபன பிரிவு, ஏற்கனவே பல வைத்தியசாலைகளின் மின்சார பராமரிப்பு பணிகளில் இருந்து விலகியுள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில், சொய்சா மகளிர் வைத்தியசாலை, ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை, தேசிய கண் வைத்தியசாலை, காசில் வீதி மகளிர் வைத்தியசாலை உள்ளிட்ட ஆறு வைத்தியசாலைகள் அதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உரிய தொகையான 34 மில்லியன் ரூபா செலுத்தப்படும் வரை மூன்றாம் தரப்பு மின்சார விநியோகத்திற்கான கோரிக்கைகளை முன்வைக்க முடியாது என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மின்சார சபை பராமரிப்புப் பிரிவானது, தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு, தொடர்ந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் என சுகாதார செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போதைய நிதி நிலைமை சிக்கலாக மாறியுள்ளதால், தேசிய வைத்தியசாலையில் 121 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிலுவைத்தொகை செலுத்தப்படாமையால் எதிர்காலத்தில் சேவைகளில் இருந்து விலக நேரிடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையின் மின் பிறப்பாக்கிகள் பராமரிக்கப்படாமல், அவை திடீரென பழுதடைந்தால், வைத்தியசாலை செயல்பாடுகள் முடங்குவதற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாத என்றும், நிலுவைத் தொகையை விரைவில் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரச் செயலாளருக்கு மின்சார சபை அறியப்படுத்தியுள்ளது.

…………………………………………………

📍Notice

 SKY TAMIL NEWS WHATSAPP CHANNEL யில் இணையுங்கள்.

நீங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணைவதால் ஒருவரின் வட்ஸ்அப் இலக்கம் மற்றவர்களும் காண்பிக்காது, இதனால் தேவையற்ற பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டி ஏற்படாது.

இன்றே இணையுங்கள்⬇️

https://whatsapp.com/channel/0029Va9VBPw2phHMWeXcSM21

…………………………………………………

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button