ஜே.எம் மீடியா கல்லூரியின் பட்டமளிப்பு விழா கொழும்பில்

மாவனல்லை ஜே.எம் மீடியா கல்லூரியின் 4ஆது பட்டமளிப்பு விழா நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஜே.எம் மீடியா தயாரிப்பு மற்றும் கல்லூரியின் ஸ்தாகரும் முகாமைத்துவப் பணிப்பாளரும் ஊடகவியலாளரும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான ராஷிட் மல்ஹர்தீன் தலைமையிலும், பொது முகாமையாளர் மென் பொருளியலாளர் ரஸா மல்ஹர்தீனின் வழிகாட்டலிலும் நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதம அதிதியாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடக துறை பிரிவான ஸ்ரீ பாலி வளாகத்தின் வெகுஜன ஊடகத்துறை பிரவின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி பிரதீப் வீரசிங்க கலந்து கொண்டார்.

கௌரவ அதீதியாக சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என்.எம் அமீன் கலந்து கொண்டார். மற்றும் அதிதிகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தி ஆசிரியர் பஸ்ஹான் நவாஸ், ஊடகவியலாளர் ரினோஸா நொஷாட், சாதிக் சிஹான் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் 3 மாத கால ஊடக கற்கையை நிறைவு செய்த 100 க்கணக்கான மாணவர்கள் தமது சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் ஊடகத்துறையின் முக்கியத்துவம் குறித்தும் ஊடக ஒழுக்கங்களுடன் கூடிய ஊடகவியலின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜே.எம் மீடியா தயாரிப்பு மற்றும் ககல்லூரியானது கடந்த 10 வருடங்களாக இலங்கை மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. மேலும், மும்மொழிகளிலும் பிரயோக ரீதியில் ஊடக கற்கை நெறியை மிகச் சிறப்பாக வழங்கும் அரச டிவெக் (TVEC) அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு ஊடக கல்லூரியாகவும் திகழ்கின்றதோடு, ஊடக கற்கை நெறியின்14ஆவது குழு மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

…………………………………………………

📍Notice

 SKY TAMIL NEWS WHATSAPP CHANNEL யில் இணையுங்கள்.

நீங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணைவதால் ஒருவரின் வட்ஸ்அப் இலக்கம் மற்றவர்களும் காண்பிக்காது, இதனால் தேவையற்ற பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டி ஏற்படாது.

இன்றே இணையுங்கள்⬇️

https://whatsapp.com/channel/0029Va9VBPw2phHMWeXcSM21

…………………………………………………

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button