பணிப்பெண்ணாக சென்ற சிறுமி – தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக இருந்த சிறுமி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்று (23) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமி பணிப்பெண்ணாக வேலை செய்த வீட்டின் உரிமையாளர்கள் சிறுமிக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து , சிறுமியை மன ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வந்ததாகவும், சிறுமியின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட போது, சிறுமியின் முழங்கால்கள் மடிந்து நிலத்தில் முட்டியவாறே காணப்பட்டமையால் , சிறுமியின் உயிரிழப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி , வட்டுக்கோட்டை முதலி கோவிலடியை சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா (17) என்றும், அவர் குடும்ப வறுமை காரணமாக குறித்த வீட்டில் தங்கியிருந்து கடந்த நான்கு மாத காலமாக பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button