இலங்கை மற்றும் இந்திய கத்தார் வாழ் ஆளுமைகளை கௌரவிக்கும் ஸ்கை தமிழ் விருது 2023

கத்தாரில் மூன்று அகவைகள் கடந்து இயக்கிக் கொண்டிருக்கும் ஸ்கை தமிழ் ஊடகம் இவ் ஆண்டு இலங்கை மற்றும் இந்திய ஆளுமைகளை கௌரவிக்கும் முகமாக விருது வழங்கும் விழாவைத் திட்டமிட்டுள்ளது.

இந்த விருது கத்தார் நாட்டில் பணி புரிந்து அவர்களுடைய திறமைகளை வெளிக்காட்டியவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இவ்விழாவானது அவர்களுடைய திறமையை கௌரவிக்கும் விதமாக சாதனை விருது, பெண்கள் சிறப்பு விருது, ஆண்டின் வணிகத் தலைவர் விருது, சிறந்த புகைப்படக் கலைஞர் விருது, சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதுகள், சிறந்த ஊடகவியலாளர் விருது, சிறந்த கலைஞர் விருது, சிறந்த அறிவிப்பாளர் விருது, இளம் சாதனையாளர் விருது, விவசாய ஊக்குவிப்பு விருது, சிறந்த டிஜிட்டல் கற்றல் கண்டுபிடிப்பு விருது, சிறந்த சமூக ஊடக செல்வாக்கு விருது என 12 வகையான விருதுப் பிரிவுகளாக வகுக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.

இவ்விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. நீங்களும் ஒரு ஆளுமைகளாக இருப்பின் ஜூலை 23 தொடக்கம் ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்க முடியும்.
www.skytamilnews.com/awards இணையதளத்தினுடாக சென்று உங்கள் விபரங்களை பூர்த்தி செய்யவும்.

விண்ணப்பம் கோரல் நிறைவுற்ற பின்னர் நடுவர்களினால் தெரிவுகள் இடம் பெற்று தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான விருது வழங்கும் விழா கத்தாரில் மிகபிரம்மாண்டமாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் தனித்துவத்தை அடையாளப்படுத்த ஸ்கை தமிழ் ஊடகம் வழங்கும் ஒரு அரிய வாய்ப்பு இது!

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button