பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு புதிய அறிவித்தல்

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்பின்னர், அடுத்த மாதம் 18ம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் அடுத்த மாதம் 28ஆம் திகதி முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி வரையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 24ஆம் திகதி வரை இடம்பெறும்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை இடம் பெறவுள்ளமையினால், பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், மூன்றாம் தவனையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 16ம் திகதி வரையில் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button