அண்மையில் பயங்கர பஸ் விபத்து ஏற்பட்ட மன்னம்பிட்டி பிரதேசத்திற்கு போக்குவரத்து அமைச்சர் தீடீர் விஜயம்

- RDA பணிப்பாளருக்கு விஷேட பணிப்புரை

பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள ஹபரணை – மட்டக்களப்பு A11 வீதியில் பதுஓயா பாலம் உட்பட ஆபத்தான இடங்களாக இனங்காணப்பட்ட பல குறுகிய பாலங்களை அண்மையில் நேரில் சென்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகம் அமைச்சர் பந்துல குணவர்தன கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு இந்தப் பாலங்களின் கட்டுமானப் பணியை எடுத்த நிறுவனம், பொருளாதார நெருக்கடி காரணமாக 2021ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை நிறுத்திவிட்டு, அதன் கட்டுமானத்தை பாதியில் நிறுத்தியதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை மானம்பிட்டிய பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற பயங்கர பஸ் விபத்து தொடர்பில் விசேட அவதானம் செலுத்திய அமைச்சர், உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு இதன் போது பணிப்புரை விடுத்துள்ளார்.

…………………………………………………

📍Notice

 SKY TAMIL NEWS WHATSAPP CHANNEL யில் இணையுங்கள்.

நீங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணைவதால் ஒருவரின் வட்ஸ்அப் இலக்கம் மற்றவர்களும் காண்பிக்காது, இதனால் தேவையற்ற பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டி ஏற்படாது.

இன்றே இணையுங்கள்⬇️

https://whatsapp.com/channel/0029Va9VBPw2phHMWeXcSM21

…………………………………………………

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button