இந்திய நாட்டினுடைய சர்வதேச விருதுக்கு இலங்கை இளைஞர் ஏ.எம்.ரோஷன் தெரிவு


உலக அளவில் உள்ள இளம் சாதனையாளர்களுக்கு விருது வழங்கிய கௌரவிக்கும் விழா எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.

இதில் பல் துறை சார்ந்த பல சாதனையாளர்கள் உலக அளவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர். இவ்விருதில் ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பினுடைய நிர்வாக குழு உறுப்பினர் ஏ.எம்.ரோஷன் அவர்களும் இலங்கை நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கு கொள்கின்ற இருவரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவ்விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட ஏ.எம்.ரோஷன் இலங்கையில் மாத்திரமன்றி உலக ரீதியில் ஊடகத் துறைக்காக முழுமையாக தன்னை அர்ப்பணித்த ஒருவர் என்பதும் எல்லோராலும் போற்றப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

இவ்விருதுக்கு தெரிவு செய்யப்பட்டவர் என்ற வகையில் எமது ஊடக வலையமைப்பு சார்பாகவும் ஏ.எம்.ரோஷன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button