கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதங்களை குறைக்கத் தீர்மானம்

கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதத்தை ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து குறைக்க வணிக வங்கிகள் தீர்மானித்துள்ளன.

கிரெடிட் கார்டுகளுக்கான தற்போதைய 34% வட்டி விகிதம் 30% ஆக குறைக்கப்படும் என்று வணிக வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மத்திய வங்கி அண்மையில் வட்டி வீதத்தை குறைத்துள்ளதுடன், வர்த்தக வங்கிகளும் அதற்கேற்ப வட்டி விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button