கல்முனை அல்- மிஸ்பாஹ்வின் பழைய மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி

கல்முனை அல்- மிஸ்பாஹ்வின் பழைய மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியில்;
மிஸ்பாஹியன்ஸ் கேன்க் பேங்க் மற்றும் 2014 டீம் 98 அணிகள் சாம்பியனாக தெரிவு..!

(எம்.என்.எம்.அப்ராஸ்)

அம்பாரை மாவட்டத்தில் சுமார் 64 வருடத்தை கடந்த முன்னணி பாடசாலையான கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களை பாடசாலையோடு மீண்டும் ஒன்றினைக்கும் முகமாக நடைபெற்ற இறுதி கிரிகெட் சுற்றுப் போட்டியின் பரிசளிப்பு மற்றும் கரப்பந்தாட்ட இறுதிப் போட்டியும்,பரிசளிப்பு நிகழ்வும் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துல் ரசாக் தலைமையில்,பிரதி அதிபர் ஐ.எல்.எம்.ஜின்னாவின் நெறிப்படுத்தலில் கடந்த வெள்ளிக்கிழமை(14) பாடசாலை மைதானத்தில் மிகவும் கோலாகலமாக  நடைபெற்றது.

அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் கற்பித்த மறைந்த ஆசிரியர்களான  மர்ஹூம் எம்.எஸ்.எம்.ஷர்மில் மற்றும் ஏ. ஹபீப் முஹம்மட் ஆகியோரின் ஞாபகார்த்தமாக குறித்த பாடசாலையின் பழைய மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட இச்சுற்றுப் போட்டியின் எம்.எஸ்.எம்.சர்மில் ஞாபகார்த்த கிரிகெட் சுற்றுப் போட்டியின் சாம்பியனாக மிஸ்பாஹியன்ஸ் கேன்க் பேங்க் அணியும் (2017 Misbahian Gang Bang)
 ஏ.ஹபீப் முஹம்மட் ஞாபகார்த்த கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் சாம்பியனாக 2014 டீம் 98
 (2014 TEAM 98) அணியும் தெரிவாகினர்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரபல தொழிலதிபரும் சமுக செயற்பாட்டாளரும்  கல்முனை அப்துல்லாஹ் ஆடையகத்தின் முகாமைத்துவ பணிப்பளர் கே.எம்.ஷாபி ஹாதிம்,கௌரவ அதிதியாக நிந்தவூர் பிரதேச செயலக பிரதம கணக்காளரும் பாடசாலையின் பழைய மாணவியுமான எஸ்.எல்.எப்.சாஜிதா,விசேட அதிதிகளாக மர்ஹூம் எம்.எஸ்.எம்.ஷர்மில் ஆசிரியரின் மகன் எம்.எஸ்.எம்.அம்ஸில்,அவரது சகலன் டி.எம்.சதாம் அவர்களும் மர்ஹூம் ஏ.ஹபீப் முஹம்மட் ஆசிரியரின் புதல்வர்களான எச்.எம்.அப்துல்லாஹ் மற்றும் எச்.எம்.அப்துல் ரஹ்மான்,பாடசாலையின் நீண்ட கால நலன்விரும்பியும் சமூக சேவையாளருமான எல்.எம்.பாறூக்,கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.எஸ்.எம். பழீல் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள்,கல்விசாரா ஊழியர்கள்,பெற்றோர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கலந்து கொண்ட அதிதிகளினால் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் இரண்டாமிடத்தை பெற்ற அணிகளுக்கு வெற்றி கிண்ணங்கள், பதக்கங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

கிரிகெட் சுற்றுப் போட்டியின் தொடர் ஆட்ட நாயகனாக 2017 மிஸ்பாஹியன் கேங் பேங் அணியின்(2017 Misbahian Gang Bang) எஸ்.எம்.அலி ரஸா தெரிவு செய்யப்பட்டதுடன் சிறந்த கரப்பந்தாட்ட வீரராக டீம் 98 அணியின்(2014 TEAM 98) எம்.அஸ்லம் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் இந்நிகழ்வின் போது அல் மிஸ்பாஹ் பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறான பழைய மாணவர்களை ஒன்றினைக்கும் நோக்குடன் நடாத்தப்பட்ட  இவ் விளையாட்டுப் போட்டியை சிறப்பாக ஒழுங்கமைத்து நடாத்தியமைக்காக பாடசாலையின் பழைய மாணவரும் வளர்ந்து வரும் இளம் தொழிலதிபரும் சாய்ந்தமருது மக்கள் மகிழ்ச்சி  நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் வித்தியாலய  விளையாட்டுப் பயிற்றுவிப்பாளருமான ஜே.எம்.ரிழ்வான் அவர்களினால் ஏற்பாட்டுக்குழு ஆசிரியர்களான அதிபர் எம்.ஐ. அப்துல் ரஸாக்,பிரதி அதிபர் ஐ.எல்.எம். ஜின்னாஹ், உடற்கல்வி ஆசிரியர்களான எம்.ஏ.எம்.ஏ.றிஸ்மி,எம்.எம். புஹாரி, ஏ.ஜே.எம்.சஸான்,விளை யாட்டுப்பயிற்றுவிப்பாளர்களான ஏ.ஜே.எம்.சாபித்,எம்.ஜே.எம்.முபீத் ஆகியோருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் ஐ.எல்.எம்.ஜின்னாஹ் அவர்கள் நிந்தவூர் அட்டபள்ளம் சஹிதா வித்தியாலயத்திற்கு அதிபராக நியமிக்கப்பட்டதனை கௌரவிக்கும் முகமாகவும் அல் மிஸ்பாஹ் பாடசாலையில் இதுவரை அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான  சேவையினை பாராட்டியும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

…………………………………………………

📍Notice

 SKY TAMIL NEWS WHATSAPP CHANNEL யில் இணையுங்கள்.

நீங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணைவதால் ஒருவரின் வட்ஸ்அப் இலக்கம் மற்றவர்களும் காண்பிக்காது, இதனால் தேவையற்ற பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டி ஏற்படாது.

இன்றே இணையுங்கள்⬇️

https://whatsapp.com/channel/0029Va9VBPw2phHMWeXcSM21

…………………………………………………

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button