நுவரெலியாவை மையமாகக்கொண்டு பல்கலைக்கழகம் அமைக்கும் ஆரம்பக்கட்ட பணிகள் ஆரம்பம்

நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான ஆரம்பகட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மலையக தோட்ட மக்கள் இலங்கைக்கு வந்து இருநூறு வருடங்கள் கடந்துள்ளதாக தெரிவித்த கல்வி அமைச்சர், அமைச்சர் ஜீவன் தொண்டமான் அரசாங்கத்துடன் இணைந்து வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக கொட்டகலை பிரதேசத்திற்கு விஜயம் செய்ததாகவும் அமைச்சர் கூறினார்.எந்தவொரு சமூகத்திற்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button