நரேந்திர மோடியின் அழைப்பின்படி ஜனாதிபதி நாளை இந்தியவுக்கு விஜயம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை(20) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.

இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததன் பின்னணியில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்திக்கவுள்ளார்.

அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற இந்திய உயரதிகாரிகளை சந்தித்து பரஸ்பர நலன் சார்ந்த பல விஷயங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் இந்தப் பயணம் உதவும் என நம்பப்படுகின்றது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button