ஒற்றைச் சக்கரத்தில் மோட்டார் சைக்கிள்களை செலுத்திய 16 இளைஞர்கள் கைது.

கடுவலை – வெலிவிட்ட வாவி வீதிக்கு அருகில் பொதுமக்களை அச்சுறுத்தி விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டில் 16 இளைஞர்கள் கடுவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் ஒற்றைச் சக்கரத்தில் குறித்த இளைஞர்கள் குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தியுள்ளனர்.

அதன்போது, அந்த பகுதிக்கு பிரவேசித்த பொலிஸார் இந்த செயற்பாட்டை நிறுத்துமாறு கட்டளையிட்ட போதிலும் அதனை மீறி குறித்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களை செலுத்தியுள்ளனர்.

எனினும், பொலிஸார் அவர்களை துரத்திச் சென்று கைதுசெய்ததுடன், மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதானவர்கள் வெல்லம்பிட்டி, முல்லேரியா, அங்கொடை, மாலபே, களனிமுல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

அவர்களை இன்று கடுவலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button