மற்றுமொரு பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!

எல்ல – வெல்லவாய வீதியின் ரஹதன்கந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனியார் பஸ் ஒன்று பள்ளமொன்றில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த மேலும் 6 பேர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button