சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு.

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

ஜூலை மாத்திதல் கடந்த 13நாட்களில் மாத்திரம் 55 ஆயிரத்து 566 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்படி 8 ஆயிரத்து 169 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அத்துடன் பிரித்தானியாவில் இருந்து 4 ஆயிரத்து 474 சுற்றுலாப் பயணிகளும், சீனாவில் இருந்து 2 ஆயிரத்து 893 பேரும் வருகை தந்துள்ளனர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 இலட்சத்து 80 ஆயிரத்து 440 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button