காங்கேசந்துறைக்கு குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பம்

கொழும்பு மற்றும் காங்கேசந்துறைக்கு இடையில் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் கருத்தின் அடிப்படையில் இந்த சொகுசு ரயில் சேவையில் முன்னெடடுக்கப்பட்டுள்ள ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே. இடிபோலகே தெரிவித்தார்.

இரவு 10 மணியளவில் இந்த சொகுசு ரயிலை இயக்கலாம் என திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில் இந்த ரயிலுக்கான டிக்கெட்டின் விலை சுமார் 4000 ரூபாய் எள தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு ரயில்வேயின் ஒரு பகுதி நவீனமயப்படுத்தப்பட்டதன் பின்னர் கோட்டைக்கும் காங்கேசந்துறைக்கும் இடையில் தினமும் ஆறு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் இடிபோலகே தெரிவித்தார்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button