சாய்ந்தமருதில் பாடசாலை உபகாரணங்கள் வழங்கும் நிகழ்வு !

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களை தெரிவுசெய்து பாடசாலை உபகாரணங்கள் மற்றும் பாதணிகள் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் நடைபெற்றது.

ஸதகா புல்லட்டின் மற்றும் பெமிலி ரிலீப் நிறுவனத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட பாடசாலை உபகாரணங்கள் மற்றும் பாதணிகள் வழங்கும் இந்த நிகழ்வில் ஸதகா புல்லட்டின் மற்றும் பெமிலி ரிலீப் நிறுவனத்தின் பிரதிநிதி பொறியியலாளர் எம்.சி.கமல் நிஷாத் மற்றும் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பளர் ஏ.சி.ஏ. றியாஸ், சம்மாந்துறை உயர் தொழிநுட்ப கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.பி. நௌஷாத், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர், நிதி உதவியாளர் ஏ.சி. முஹம்மட், கிராம உத்தியோகத்தர்களான எல்.நாஸர், ஏ.எம். அஜ்ஹர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button