டுவிட்டர் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி….

யூடியூப் போல, டுவிட்டர் பயனாளர்களும் இனி விளம்பர வருவாய் மூலம் வருவாயை ஈட்டும் வசதி விரைவில் வரவிருப்பதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.தொழிலதிபர் எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.

அதில் ப்ளூ டிக் பெற கட்டணம், தனி நபர்களை சப்ஸ்கிரைப் செய்து, சிறப்பு தகவல்களை பெறுதல் போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

ப்ளூ டிக் பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு பல விமரிசனங்களைப் பெற்ற போதிலும், பலரும் பணம் செலுத்தி ப்ளூ டிக் பெற்றனர்.

ஆனால், அப்போதே, ப்ளூ டிக் பெறுபவர்களுக்கு தகுதி அடிப்படையில் டுவிட்டர் விளம்பரம் மூலம் வரும் வருவாயில் ஒரு பகுதியை பகிர்ந்துகொள்ளப் போவதாக அறிவித்திருந்தார் எலான் மஸ்க். தற்போது தான் சொன்னதை செய்தும் காட்டியுள்ளார்.

அதன்படி, ப்ளூ டிக் பெற்ற பயனாளர்களுக்கு, விளம்பர வருவாயில் ஒரு தொகையை பகிரும் பணி தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டுவிட்டர் கிரியேட்டர்களுக்கு இது தொடர்பான மின்னஞ்சலும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாம். சிலர், தங்களுக்கு டுவிட்டரிலிருந்து வந்திருக்கும் வருவாய் தொடர்பான தகவல்களையும் டுவிட்டரில் பகிர்ந்து வருகிறார்கள்.

ஐரோப்பா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் மட்டுமே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளததகவும் விரைவில் இது பரவலாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

டுவிட்டர் தளத்துக்கு போட்டியாக, மெட்டா நிறுவனம் திரெட்ஸ் என்ற சமூக வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.

டுவிட்டரின் செயல்படும் முறை போலவே, இந்த திரெட்ஸ் இருந்ததால் அதன் மீது சட்டப்படி வழக்குத் தொடரப்படும் என்று கூட எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தான் டுவிட்டர் பயனர்களுக்கு, விளம்பரத்தில் இருந்து கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை பகிர்ந்துகொள்ளும் திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கின்றமை போட்டியை சற்று சுவாரஸ்யப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button