மட்டு வெல்லாவெளியில் பாரம்பரிய நெல் அறுவடை யின் விளைச்சல் மதிப்பீடு

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலையடிவட்டை விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள நவகிரிநகரில் மடத்தவாலு எனும் பாரம்பரிய இன நெற்செய்கையின் அறுவடை ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் விளைச்சல் மதிப்பீடும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது.

பாலையடிவட்டை விவசாய போதனாசிரியர் ரீ.கோபியின் ஏற்பாட்டில் தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் எஸ்.சித்திரவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாய போதனாசிரியர் பி. சகாப்தன் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் கிலசன் மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

மடத்தவாலு எனும் பாரம்பரிய நெல் இனமானது இயற்கையாகவே நோய் பீடை தாக்கங்களுக்கு எதிர்ப்பு தன்மை உடையதாகவும் மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியதாகவும் உள்ள ஒரு பழமையான நெல் இனமாகும்.

இரசாயன பசளை மற்றும் இரசாயன பீடை நாசினிகள் எதுவும் பாவிக்காமல் இயற்கை முறையில் ஒருங்கிணைந்த நோய் பீடைக்கட்டுப்பாட்டு முறைகளை பயன்படுத்தி செய்கை பண்ணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

…………………………………………………

📍Notice

 SKY TAMIL NEWS WHATSAPP CHANNEL யில் இணையுங்கள்.

நீங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணைவதால் ஒருவரின் வட்ஸ்அப் இலக்கம் மற்றவர்களும் காண்பிக்காது, இதனால் தேவையற்ற பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டி ஏற்படாது.

இன்றே இணையுங்கள்⬇️

https://whatsapp.com/channel/0029Va9VBPw2phHMWeXcSM21

…………………………………………………

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button