சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து.

இலங்கையில் எரிபொருள் விநியோகம் தொடர்பான ஒப்பந்தத்தில் சினோபெக் நிறுவனமும் இலங்கை முதலீட்டுச் சபையும்  இன்று (14) கைச்சாத்திட்டுள்ளன.

எரிபொருள் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விற்பனையை உள்ளடக்கிய திட்டத்தில் சினோபெக் நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது.

தற்போது பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் பராமரிக்கப்படும் 150 தனியார் எரிபொருள் விற்பனை நிலையங்கள் இத்திட்டத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

மேலும், 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. 

இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் இலக்கம் 17இன் படி, சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் 20 வருடங்களுக்கு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒப்பந்தத்தின் ஊடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சினோபெக் நிறுவனத்தினால் 92 மற்றும் 95 ஒக்டேன் பெற்றோல், 500 PPM டீசல் உள்ளிட்ட பல்வேறு பெற்றோலிய பொருட்களை விற்பனை செய்யவுள்ளது.

…………………………………………………

📍Notice

 SKY TAMIL NEWS WHATSAPP CHANNEL யில் இணையுங்கள்.

நீங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணைவதால் ஒருவரின் வட்ஸ்அப் இலக்கம் மற்றவர்களும் காண்பிக்காது, இதனால் தேவையற்ற பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டி ஏற்படாது.

இன்றே இணையுங்கள்⬇️

https://whatsapp.com/channel/0029Va9VBPw2phHMWeXcSM21

…………………………………………………

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button