இவ்வருட சாஹித்திய விழா தோப்பூரில் .

(தோப்பூர் – எஸ்.ஏ.எம்.அஸ்மி)

வருடாந்தம் மூதூர் பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படும் வருடாந்த சாஹித்திய விழா தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் (12) மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக் தலைமையில் தோப்பூர் உப பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன் போது, இவ் வருடத்திற்கான (2023) பிரதேச சாஹித்திய விழாவினை தோப்பூரில், நவம்பர் நடாத்துவது எனவும் அதற்குரிய ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதெனவும், செயற்குழு, நிதிக்குழு, மலர்க்குழு உட்பட ஏனைய குழுக்களை அடுத்த கட்ட கலந்துரையாடலின் போது தெரிவு செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கலாசார உத்தியோகத்தர் எப்.எம்.பசீர், திருமதி லலிதா தேவி உட்பட தோப்பூர் கலை இலக்கிய பேரவை உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button