விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்…

அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களை கண்டறிவதற்காக விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்காக 4 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலன்னறுவை – மன்னம்பிட்டி பாலத்தில் இருந்து பஸ்ஸொன்று ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளானதையடுத்து இந்த நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன் 40-இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

குறித்த பேரூந்தும் அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button