கொழும்பில் காதலி மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த காதலன் .

கொழும்பு ஆட்டுப்பட்டி தெருவில் பெண் ஒருவர் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் கொழும்பு ஆட்டுப்பட்டி தெருவை சேர்ந்த 27 வயதுடைய பெண்ணாவார்.

இவர் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதோடு இரு பிள்ளைகளின் தாயாவார்.

இந்நிலையில் இவர் சில காலமாக நபரொருவருடன் காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளார்.

சந்தேக நபர் குறித்த பெண்ணை முச்சக்கரவண்டியில் வைத்து அவர் மேல் பெற்றோல் ஊற்றி தீ வைத்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அலறிக்கொண்டு வீதிக்கு வந்து வீழ்ந்துள்ளார்.

பின்னர் பிரதேசவாசிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதோடு அவர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பணம் கேட்டும் அதை அவர் கொடுக்காததால் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பாதிக்கப்பட்டவரது பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button