இறக்காமம் மண்ணிலிருந்து 19 வயதில் விமானியாய் பறக்கும் முஹன்னா மௌலானா!

இறக்காமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கிழக்கு மாகாணத்தின் முதலாவது கப்பல் துறை பொறியியலாளர் செய்யது இஸ்ஹாக் மன்சூர் அவர்களின் புதல்வர் எம். எஸ். முஹன்னா மௌலானா தனது 19 ஆவது வயதில் விமானியாக வேண்டும் என்ற தனது இலக்கை நோக்கி வீறுநடை போட்டு வருகிறார்.

நாம் எமது பிள்ளைகளுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும் எனும் தோரணையிலே இது எஸ்.ஐ. மன்சூர் அவர்கள் தனது மகனுக்கு இத்துறை சார்ந்த கல்விக்காக வழிகாட்டியமை பாராட்டுக்குரியதாகும். தான் 19 வயதிலேயே கப்பல் பொறியியல் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் சிறந்த அடைவை எட்டியது போன்று தனது மகனையும் வழிப்படுத்தியுள்ளார்.

இவரைப் போன்று தனது மகனும் தனது 19ஆவது வயதிலேயே விமானிப் பயிலுனராக ஆகாயத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

இப்படி பல வித்தியாசமான துறைகளை தேர்ந்தெடுத்தல் என்பது தற்காலத்தின் தேவையாக உள்ளது. தனக்குள் என்ன இருக்கின்றது என்பதை அறிவது தான் உண்மையான கல்வி அப்போதுதான் தனக்குரிய துறையில் பாண்டித்தியம் பெற்று சிறந்து விளங்க முடியும் என்பது முக்கியமான ஒரு அம்சமாகும். இது பெற்றோர்களினதும் எமது சமூகத்தில் காணப்படும் புத்திஜீவிகளினதும் தலையாயக் கடமையாகும்.

நாம் பாடசாலை கல்வியிலே ஜப்பான் அபிவிருத்தியில் எவ்வாறு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை பற்றி கற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால் இலங்கை அபிவிருத்தியில் எவ்வாறு பின்னோக்கி இருக்கின்றது.

என்பது பற்றி கற்பிக்கப்படுவதில்லை. முன்னேற்றத்துக்கான அடுத்த உந்துதல்கள் என்ன என்பது பற்றிய விடயத்தைத் தேடி அறியாமல் இருப்பதே எமது உறங்கு நிலையாகும்.

நாம் எல்லோரும் நமது பிள்ளைகளை குறிப்பிட்ட ஒரு சில துறைகளுக்கு மாத்திரமே அனுப்புகிறோம் ஆனால் எல்லா வேறு பட்ட துறைகளையும் நாம் தெரிவு செய்வது காலத்தின் தேவையாகும்.

ஸெய்ன்ஸித்தீக்

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button