4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றி.

ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கையுடன் தகுதி பெறப்போகும் 2 வது அணி எது என்பதைத் தீர்மானிக்கும் உலகக் கிண்ண தகுதிகாண் சுப்பர் 6 போட்டியில் நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

புலாவாயோவில் இன்று (06) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 277 ஓட்டங்களை பெற்றது.

ஸ்கொட்லாந்து அணி சார்பாக Brandon McMullen அதிகூடிய ஓட்டங்களாக 106 ஓட்டங்களை பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 42.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 278 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

நெதர்லாந்து அணி சார்பாக Bas de Leede அதிகூடிய ஓட்டங்களாக 123 ஓட்டங்களை பெற்றார்.

இதன் அடிப்படையில் ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நெதர்லாந்து அணி தகுதி பெற்றுள்ளது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button